ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

2-வது நாளில் ராகுலிடம் 4 மணி நேரம் விசாரணை

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியிடம் 2-வது நாளாக அமலாக்கத்துறை நடத்திய விசாரணை நிறைவடைந்துள்ளது. 

News image
Updated On :14 ஜூன் 2022, 10:38 am

DIN

நேஷனல் ஹெரால்டு வழக்கில் 2-வது நாளாக ராகுல் காந்தியிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளது அமலாக்கத்துறை. 

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்பான பணமோசடி வழக்கில் நேரில் ஆஜராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. 

அதன்படி, திங்கள்கிழமை ஆஜரான காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் சுமாா் 10 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக ராகுல் காந்தியிடம் 4 மணி நேரம் விசாரணை நடைபெற்றுள்ளது. 4 மணி நேர விசாரணைக்குப் பிறகு பிற்பகல் 3.30 மணியளவில் ராகுல் காந்தி, அமலாக்கத்துறை அலுவலகத்தை விட்டுச் சென்றுள்ளார். 

அமலாக்கத்துறை ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பியதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து இரண்டு நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக, நேஷனல் ஹெரால்டு வழக்கத்தில் ஜூன் 2-ஆம் தேதி ஆஜராகுமாறு ராகுலுக்கும், ஜூன் 8-ஆம் தேதி ஆஜராகுமாறு சோனியாவுக்கும் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. தான் வெளிநாட்டில் இருப்பதால் விசாரணைத் தேதியை மாற்றியமைக்க வேண்டும் என்று ராகுல் காந்தியும் அதுபோல, விசாரணைத் தேதியை மாற்றுமாறு கரோனாவால் பாதிக்கப்பட்ட சோனியாவும் அமலாக்கத் துறைக்கு கோரிக்கை விடுத்தனர். 

இதனை ஏற்ற அமலாக்கத் துறை, ராகுல் காந்தி ஜூன் 13 ஆம் தேதியும், சோனியா காந்தி ஜூன் 23-ஆம் தேதியும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. இதன் அடிப்படையில் ராகுலிடம் விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில் வருகிற 23 ஆம் தேதி சோனியா காந்தி ஆஜராவார் என்று தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.