மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நேஷனல் ஹெரால்டு: வெள்ளிக்கிழமையும் ஆஜராக ராகுலுக்கு சம்மன்

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியிடம் கடந்த மூன்று நாள்களாக விசாரணை நடத்திய நிலையில், வெள்ளிக்கிழமையும் ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.

News image
விசாரணை முடிந்து அமலாக்கத் துறை தலைமையகத்திலிருந்து வெளியேறும் ராகுல் காந்தி
Updated On :15 ஜூன் 2022, 4:53 pm

DIN


நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியிடம் கடந்த மூன்று நாள்களாக விசாரணை நடத்திய நிலையில், வெள்ளிக்கிழமையும் ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியது. சோனியா காந்தி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கோரியுள்ளார். அமலாக்கத் துறையும் இதற்கு அனுமதி வழங்கியது.

ராகுல் காந்தி முதன்முதலாக கடந்த திங்கள்கிழமை அமலாக்கத் துறை விசாரணை முன்பு ஆஜரானார். இதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமையும் அமலாக்கத் துறை அவரிடம் விசாரணை நடத்தியது.

புதன்கிழமை அவரிடம் 8 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை நிறைவடைந்த நிலையில், இரவு 9.30 மணியளவில் அவர் அமலாக்கத் துறை தலைமையகத்திலிருந்து வெளியேறினார்.

ராகுல் காந்தியிடம், இதுவரை மொத்தம் 30 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளது அமலாக்கத் துறை.

இந்த நிலையில், வியாழக்கிழமையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை தெரிவித்தது. வியாழக்கிழமை ஆஜராவதற்கு ராகுல் காந்தி விலக்கு கேட்டதால், வெள்ளிக்கிழமை ஆஜராவதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

ராகுல் காந்தியிடம் தொடர் விசாரணை நடத்தி வருவது மத்திய அரசின் அரசியல் பழிவாங்கும் செயல் எனக் குற்றம்சாட்டி வரும் காங்கிரஸ் கட்சியினர், அமலாக்கத் துறைக்குச் செல்லும் சாலைகளில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.