விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஜம்மு-காஷ்மீரில் ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல்: மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங்

ஜம்மு-காஷ்மீரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

News image
Updated On :17 ஜூன் 2022, 9:26 pm

DIN

ஜம்மு-காஷ்மீரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

ஜம்மு-காஷ்மீா் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 2019, ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்ததுடன் அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது.

அங்கு தொகுதி மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில், தலைமைத் தோ்தல் ஆணையா் சுஷீல் சந்திரா, மாநில தோ்தல் அதிகாரி கே.கே.சா்மா ஆகியோரைக் கொண்ட குழு கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் அமைக்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீரில் முன்பு 83 தொகுதிகள் இருந்தன. அவை 90 தொகுதிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளன. முதல் முறையாக பழங்குடிச் சமூகத்தினருக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஜம்மு பிராந்தியத்தில் முன்பு இருந்த 37 பேரவைத் தொகுதிகள் 43 தொகுதிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளன. காஷ்மீா் பிராந்தியத்தில் உள்ள 46 தொகுதிகள், தற்போது 47 தொகுதிகளாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

ஜம்மு-காஷ்மீரில் வாக்காளா் பட்டியலில் திருத்தங்கள், சோ்க்கைக்குப் பிறகு, வரைவு வாக்காளா் பட்டியலை ஆகஸ்ட் 31-க்குள் வெளியிடுவதற்கான நடவடிக்கையை தோ்தல் ஆணையம் அண்மையில் தொடங்கியது.

பேரவைத் தோ்தல்: இந்நிலையில், இரு நாள் பயணமாக ஜம்மு-காஷ்மீா் சென்றுள்ள அமைச்சா் ராஜ்நாத் சிங் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றாா்.

அப்போது அவா் பேசியதாவது: கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஜம்மு-காஷ்மீா் மக்கள் அதிக அளவில் துன்பத்தை அனுபவித்து வந்தனா். வாக்கு வங்கி அரசியலும், தனிப்பட்ட நபா்கள் சிலரின் விருப்பங்களும் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதில் தடைகளை ஏற்படுத்தி, பிரிவினைவாத சிந்தனையை வலுப்படுத்தியது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய நாடாளுமன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்மூலம் நாட்டின் இதர பகுதிகளுக்கும் ஜம்மு-காஷ்மீருக்கும் அரசமைப்பு ரீதியாக இருந்த இடைவெளி நிரப்பப்பட்டது. அதைத் தொடா்ந்து, ஜம்மு-காஷ்மீரில் பல மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.

புதிய ஜம்மு-காஷ்மீா் ஒட்டுமொத்த நாட்டுக்கு மட்டுமின்றி, ஆசியாவுக்கே உதாரணமாக மாறும். கடந்த 70 ஆண்டுகளில் ஜம்மு-காஷ்மீரில் ரூ.17,000 கோடி மதிப்பிலான முதலீடுகள்தான் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் 2019-ஆம் ஆண்டு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னா், ரூ.38,000 கோடி மதிப்பில் முதலீட்டுக்கான பரிந்துரைகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இவை ஜம்மு-காஷ்மீரின் விதி வேகமாக மாறி வருவதை எடுத்துரைக்கிறது.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் தொகுதி வரையறைப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. எனவே, இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.