இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

’காங்கிரஸ் கட்சியை சோனியா காந்தியே வழிநடத்துவார்’

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தொடருவார் என்று மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். 

News image
செயற்குழு கூட்டத்தில் சோனியா காந்தி
Updated On :13 மார்ச் 2022, 4:34 pm

DIN

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தொடருவார் என்று மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். 

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு பிறகு தில்லியில் முதல்முறையாக காங்கிரஸ் செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் சுமார் 2.30 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில், காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வது, 5 மாநிலத் தேர்தல் தோல்விக்கான காரணம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் கட்சியை இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியே வழிநடத்துவார். அவருடைய தலைமையின் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது என்று கூறினார். 

இதேபோன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் கோவா பொறுப்பாளர், தினேஷ் குண்டுராவ் கூறியதாவது, செயற்குழு கூட்டத்தில் மாநிலத் தேர்தல்கள் குறித்தும் செயல்பட வேண்டிய விதம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் குறித்தும் விவாதிக்கப்பட்டது. காங்கிரஸை சோனியா காந்தி தலைமையேற்று வழிநடத்துவார். அடுத்தடுத்து வரும் தேர்தல்களை எதிர்கொள்வது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது என்று கூறினார். 

செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் செல்போன் பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதனால் விவாதிக்கப்பட்ட முழு விவரங்களை அறிக்கை வாயிலாக காங்கிரஸ் கட்சி வெளியிடவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இக்கூட்டத்தில் கே.சி. வேணுகோபால், குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம், பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், பூபேஷ் பாகல் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.