கர்நாடகம்: அணையின் சுவரில் ஏற முயன்று 30 அடி உயரத்தில் இருந்து விழுந்த இளைஞர்
கர்நாடகத்தில் ஸ்ரீனிவாஸ் சாகர் அணையின் சுவரில் ஏற முயன்ற இளைஞர் 30 அடி உயரத்தில் இருந்து விழுந்து படுகாயமடைந்தார்.


கர்நாடகத்தில் ஸ்ரீனிவாஸ் சாகர் அணையின் சுவரில் ஏற முயன்ற இளைஞர் 30 அடி உயரத்தில் இருந்து விழுந்து படுகாயமடைந்தார்.
கர்நாடக மாநிலம், சிக்கபல்லாபுரா மாவட்டத்தில் ஸ்ரீனிவாஸ் சாகர் அணை உள்ளது. இந்த அணையின் சுவரின் மீது இளைஞர் ஒருவர் ஏற முயற்சித்திருக்கிறார். அப்போது அங்கிருந்தவர்கள் இளைஞரிடம் ஏற வேண்டாம் என அறிவுறுத்திருத்தியுள்ளனர்.
ஆனால் அவர்களின் அறிவுத்தலை ஏற்காத இளைஞர் அணையின் சுவர் மீது ஏறியுள்ளார். சுமார் 30 அடி உயரம் வரை ஏறிய அவர் திடீரென கீழே விழுந்தார். இதில் அந்த இளைஞர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தற்போது இந்த விடியோ வைரலாகி வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக இளைஞர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இதுபோன்ற செயலில் யாரேனும் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...