தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

'மேக்கேதாட்டு குறித்து விவாதிக்கக் கூடாது' -உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்

காவிரி ஆணையக் கூட்டத்தில் மேக்கேதாட்டு குறித்து விவாதிக்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

News image
Updated On :22 நவம்பர் 2022, 8:18 am

DIN

காவிரி ஆணையக் கூட்டத்தில் மேக்கேதாட்டு குறித்து விவாதிக்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. 

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டு வருகிறது. கர்நாடக அரசின் முடிவு உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது என்றும், மத்திய அரசு இதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு விசாரணையில் இருந்து வருகிறது. 

மேக்கேதாட்டு அணை தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று கூடுதல் பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது. 

அதில், மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசுக்கு அதிகாரம் இல்லை. மேக்கேதாட்டு அணை குறித்து காவிரி ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கலாம் என்ற மத்திய அரசின் கருத்தை நீதிமன்றம் ஏற்கக்கூடாது. 

மேக்கேதாட்டு அணை திட்டம் குறித்த விரிவான திட்ட அறிக்கையை ஆய்வு செய்ய காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு அதிகாரமில்லை. காவிரி ஆணையக் கூட்டத்தில் மேக்கேதாட்டு குறித்து விவாதிக்கக் கூடாது. 

உச்ச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை மேக்கேதாட்டு குறித்து விவாதிக்கத் தடை வேண்டும்' என தமிழக அரசு தன்னுடைய மனுவில் குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.