கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஆந்திரம்: காவல் நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் கட்டடங்கள், வாகனங்கள் சேதம்

ஆந்திரத்தில் காவல்நிலைய வளாகத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் வாகனங்கள் சேதமடைந்தன. 

News image
Updated On :8 அக்டோபர் 2022, 1:36 pm

DIN

ஆந்திரத்தில் காவல்நிலைய வளாகத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் வாகனங்கள் சேதமடைந்தன. 

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள கங்காதரநெல்லூர் காவல்நிலைய வளாகத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் காவல் நிலையத்தின் கட்டடம் மற்றும் அருகிலிருந்த வீடுகளின் கதவுகள், ஜன்னல் கண்ணாடிகளும் சேதமடைந்தன. மேலும் காவல்நிலைய வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களும் தீயில் எரிந்து நாசமாயின. 

வெடிவிபத்தின் போது காவல் நிலைய வளாகத்தில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. அதேசமயம் காவல் நிலையத்தில் இருந்த காவலர் ஒருவர் லேசான காயம் அடைந்தார். உடனடியாக காவல் நிலையத்திற்கு விரைந்த உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். மேலும் வெடி விபத்து குறித்து விசாரணை நடத்தவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு குவாரி நடத்துபவர்கள் சட்டவிரோதமாக பதுக்கிவைத்திருந்த வெடிபொருள்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் அதனை காவல் நிலைய வளாகத்தில் வைத்திருந்தனர். தற்போது அந்த வெடிப்பொருள்களே எதிர்பாராதவிதமாக வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.