/

நாட்டில் புதிதாக 2,208 பேருக்கு தொற்று!

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,208 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 12 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். 

News image
Updated On :28 அக்டோபர் 2022, 4:58 am

DIN

புது தில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,208 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 12 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். 

கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. 

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 2,208 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதை அடுத்து தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,46,49,088 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து இறப்பு எண்ணிக்கை 5,28,999 ஆக உயர்ந்துள்ளது. 

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3,619 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,00,691 ஆக பதிவாகியுள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 19,398 ஆகக் குறைந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.77 சதவீதமாக அதிகரித்துள்ளது.

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 2,19,60,45,500 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் மட்டும் 1,60,714 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.