கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஞானவாபி மசூதி விவகாரம் குறித்து மெகபூபா முப்தி கூறியது என்ன?

மக்களின் கவனத்தை திசை திருப்பவே ஞானவாபி மசூதி பிரச்சினையை, பாஜக கையில் எடுத்துள்ளது என மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தி கூறியுள்ளார். 

News image
Updated On :13 செப்டம்பர் 2022, 10:55 am

DIN

மக்களின் கவனத்தை திசை திருப்பவே ஞானவாபி மசூதி பிரச்சினையை, பாஜக கையில் எடுத்துள்ளது என மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தி கூறியுள்ளார். 

உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் உள்ள காசி விஸ்வநாதா் கோயிலுக்கு அருகே உள்ள ஞானவாபி மசூதியின் வெளிச் சுவரில் ஹிந்து கடவுள் சிலைகளை தரிசிக்க அனுமதிக்கக் கோரி தில்லியைச் சோ்ந்த ஐந்து பெண்கள் வாராணசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்தி விடியோ பதிவு செய்ய குழுவை அமைத்தது.

இதற்கு எதிரான முஸ்லிம் தரப்பினரின் மனுவை தள்ளுபடி செய்தது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பா் 22- ஆம் தேதி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும் என நீதிமன்றம் தெரிவித்தது. 

இது குறித்து ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான மெகபூபா முப்தி கூறியதாவது: 

1947க்கு பிறகு மதவழிபாட்டு தலங்களை பாதுகாப்போம் என நீதிமன்றம் கூறியது. பாஜக வேலைவாய்ப்பு ஏற்படுத்துதல், வறுமையை ஒழித்தல் மற்றும் பணவீக்கத்தை கட்டுபடுத்த தவறிவிட்டது. அதனால் மக்களின் கவனத்தை திசை திருப்பவே இந்த ஞானவாபி மசூதி பிரச்சினையை கையில் எடுத்துள்ளது. நீதிமன்றமும் பாஜகவுக்கு துணையாக இருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.