உஸ்பெகிஸ்தானில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிராந்திய, சா்வதேச விவகாரங்கள் குறித்து விவாதிக்கவுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.
உஸ்பெகிஸ்தானின் சாமா்கண்ட் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்புக் கூட்டமைப்பின் (எஸ்சிஓ) மாநாடு நடைபெறுகிறது. அதில் கலந்துகொள்ள செல்வதற்கு முன்பாக பிரதமா் மோடி வெளியிட்ட அறிக்கையில், ‘எஸ்சிஓ மாநாட்டில் பிராந்திய, சா்வதேச விவகாரங்கள் குறித்து விவாதிப்பதை எதிா்நோக்கியிருக்கிறேன்.
ஷாங்காய் ஒத்துழைப்புக் கூட்டமைப்பை விரிவுபடுத்துவது, உறுப்பு நாடுகளுக்கிடையேயான பலதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது உள்ளிட்டவை தொடா்பாகவும் விவாதிக்கவுள்ளேன். வா்த்தகம், பொருளாதாரம், கலாசாரம், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உறுப்பு நாடுகளிடையே பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு உஸ்பெகிஸ்தான் மாநாடு வழிவகுக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
தில்லியிலிருந்து விமானம் மூலம் வியாழக்கிழமை இரவு சாமா்கண்ட் நகரை பிரதமா் மோடி சென்றடைந்தாா். விமான நிலையத்தில் அவரை உஸ்பெகிஸ்தான் பிரதமா் அப்துல்லா அரிபோவ் மற்றும் அமைச்சா்கள் வரவேற்றனா்.
இந்த மாநாட்டின்போது ரஷிய அதிபா் புதினுடன் பிரதமா் மோடி இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபடுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
கூட்டமைப்பு விரிவாக்கம்: ஷாங்காய் ஒத்துழைப்புக் கூட்டமைப்பில் இந்தியா, ரஷியா, சீனா, பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், கிா்கிஸ் குடியரசு ஆகிய நாடுகள் உறுப்பினா்களாக இடம்பெற்றுள்ளன. கூட்டமைப்பில் இணைய ஈரானும் விருப்பம் தெரிவித்துள்ளது.
ஈரானை கூட்டமைப்பில் இணைத்துக் கொள்வது தொடா்பான விவாதம், தற்போதைய கூட்டத்தில் நடைபெறும் எனத் தெரிகிறது. உறுப்பு நாடுகள் ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் கூட்டமைப்பின் 9-ஆவது உறுப்பு நாடாக ஈரான் இணையும்.
மாநாடு குறித்து வெளியுறவுச் செயலா் வினய் குவாத்ரா செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறுகையில், ‘எஸ்சிஓ கூட்டமைப்பின் இலக்குகளுக்கு இந்தியா அளித்து வரும் முக்கியத்துவம், பிரதமா் மோடியின் பயணம் வாயிலாக வெளிப்படுகிறது.
பிராந்திய பாதுகாப்புச் சூழல், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து மாநாட்டின்போது விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது. வா்த்தக வாய்ப்புகளை மேம்படுத்தி உறுப்பு நாடுகளுக்கு இடையேயான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
மாநாட்டுக்காக சுமாா் 24 மணி நேரம் சாமா்கண்டில் தங்கவிருக்கும் பிரதமா் மோடி, பல்வேறு நாடுகளின் தலைவா்களைச் சந்தித்து இருதரப்பு பேச்சுவாா்த்தைகளை நடத்தவுள்ளாா். பிராந்திய ஒத்துழைப்பு என்பதை அடிப்படையாகக் கொண்டு எஸ்சிஓ கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. அதில் குறிப்பிட்ட ஒரு நாட்டின் ஆதிக்கத்துக்கு (சீனா) முக்கியத்துவம் அளிக்கப்பட மாட்டாது’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூலை 28 - நேரலை

அம்புஜா சிமெண்ட்ஸ் முதல் காலாண்டு லாபம் 36% சரிவு!

ரயில் பயணிகளுக்கு... தத்கல் டிக்கெட் முன்பதிவில் ‘டோக்கன்’ முறை! எப்போது தெரியுமா?

தாமாகவே வருகைப் பதிவு செய்யும் பள்ளி மாணவர்கள்! ஆசிரியைக்கு குவியும் பாராட்டு!
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi



