அனைவரும் அரசியல் சாசன முகவுரையை படியுங்கள்: இர்ஃபான் பதான்

நாட்டு மக்கள் அனைவரும் அரசியல் சாசனத்தின் முகவுரையை படியுங்கள் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கேட்டுக்கொண்டுள்ளார். 
அனைவரும் அரசியல் சாசன முகவுரையை படியுங்கள்: இர்ஃபான் பதான்


நாட்டு மக்கள் அனைவரும் அரசியல் சாசனத்தின் முகவுரையை படியுங்கள் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கேட்டுக்கொண்டுள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்க பதிவில், இந்திய மக்களாகிய நாம், இந்தியாவை ஒரு இறையாண்மை வாய்ந்த, சமதர்ம நெறி சார்ந்த, மதச்சார்பற்ற, மக்களாட்சிக் குடியரசாக அமைக்கவும், மக்களாட்சிக் குடியரசாக அமைக்கவும், அதன் குடிமக்கள் அனைவருக்கும் சமுதாய, பொருளாதார மற்றும் அரசியல் நீதியும், சிந்தனை வெளிப்பாட்டில் நம்பிக்கையும், பற்றார்வத்தில் மற்றும் வழிபாட்டில் சுதந்திரமும், தகுதி நிலையில் மற்றும் வாய்ப்பில் சமத்துவமும்; உறுதியாகக் கிடைக்கச் செய்யவும், தனி ஒருவரின் மாண்புக்கும், நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் உறுதியளிக்கும் உடன் பிறப்புணர்வை அவர்கள் அனைவரிடையே வளர்க்கவும், விழுமிய முறைமையுடன் உறுதி பூண்டு, 1949, நவம்பர் இருபத்து ஆறாம் நாள் நம்முடைய அரசியல் நிர்ணய சபையில், இந்திய அரசியலமைப்பை ஏற்று, சட்டமாக இயற்றி, நமக்கு மாமே வழங்கிக் கொள்கிறோம்.

" நாட்டு மக்கள் அனைவரும் நமது நாட்டின் அழகான அரசியல் சாசனத்தின் முகவுரையை படியுங்கள்; நான் எப்போதும் இதை பின்பற்றுகிறேன். 

நம் நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களும் இதனை பின்பற்ற வேண்டும்" என கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com