
பிகார் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதீஷ் குமார் தலைமையிலான மகா கூட்டணி வெற்றி பெற்றது.
பாஜக கூட்டணியிலிருந்து விலகி ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து நிதீஷ் குமார் மீண்டும் ஆட்சியமைத்தார்.
ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் ஆதரவுடன் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் மீண்டும் நிதீஷ் அரசு வெற்றி பெற்றுள்ளது.
படிக்க | பாஜகவினரின் சர்ச்சைப் பேச்சு: இதுவே கடைசியாக இருக்க வேண்டும் -ஓவைசி
பிகார் சட்டப்பேரவையில் 243 உறுப்பிகள் உள்ளனர். இதில், நிதீஷ் குமார் அரசுக்கு 164 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது. பெருவாரியான உறுப்பினர்களின் வாக்குகள் நிதீஷ் குமாருக்கு கிடைத்ததால், நிதீஷ் தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.
பாஜகவிலிருந்து விலகி ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதவுடன் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவரான நிதீஷ் குமார் மீண்டும் முதல்வரானார். துணை முதல்வராக ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ் பொறுப்பேற்றார்.
மேலும், பிகாரில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இதனிடையே பிகார் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் தனது அரசின் பெரும்பான்மையை முதல்வா் நிதீஷ் குமார் நிரூபித்துள்ளார்.