பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

தில்லி எய்ம்ஸ் சர்வர் முடக்கப்பட்டதன் பின்னணியில் சீனா

பின்னணியில் சீனத்தைச் சேர்ந்த ஹேக்கர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News image
Updated On :14 டிசம்பர் 2022, 12:21 pm


புது தில்லி: தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (எய்ம்ஸ்) முடக்கப்பட்ட 5 இணைய சா்வா்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டன. இதன் பின்னணியில் சீனத்தைச் சேர்ந்த ஹேக்கர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் சர்வர்கள் முழுவதும் வெற்றிகரமாக பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகத்திலிருந்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுவது என்னவென்றால், எய்ம்ஸ் தில்லி சர்வர்களை ஹேக் செய்தவர்கள் சீனர்கள். இது குறித்து பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், சீனர்கள் ஹேக் செய்திருப்பதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 100 சர்வர்களில், தற்போது 5 பிசிகல் சர்வர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சேதம் மிக மோசமாவதிலிருந்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த 5 சர்வர்களிலிருக்கும் தகவல்களும் பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயத்தில், நோயாளிகள் மருத்துவா்களுடான சந்திப்பிற்கான இணைய பதிவு வசதி, அத்தியாவசியமான மருத்துவ பிரிவுகளின் சா்வா்கள் இன்னும் செயல்படத் தொடங்கப்படவில்லை. மேலும், ஆய்வக சேவைகள் காகித வழியிலான கைமுறை முறையில் இயங்குகின்றன என எய்ம்ஸ் நிா்வாக அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.

சர்வர்கள் மீட்கப்பட்டதன் மூலம், வெளிநோயாளிள் பிரிவு (ஓபிடி) பதிவு மற்றும் சோ்க்கை செயல்முறைகள் இ-ஹாஸ்பிடல் அமைப்பு கடந்த திங்கள்கிழமை இணைய முறையில் கொண்டு வரப்பட்டன. அனைத்து வாா்டுகளிலிருந்தும் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் தானியங்கி பகுப்பாய்வு மற்றும் அறிக்கையிடலுக்காக ஸ்மாா்ட் ஆய்வகத்தின் ஒருங்கிணைப்பும் பணிபுரிய தொடங்கியுள்ளது.

தில்லியில் உள்ள எய்ம்ஸ் நிறுவனத்தின் இணைய தளம் கடந்த நவம்பா் 23 ஆம் தேதி காலையில் தாக்குதலை எதிா்கொண்டு அதன் சா்வா்கள் முடங்கியது. மிரட்டி பணம் பறித்தல் மற்றும் இணைய பயங்கரவாதம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கடந்த நவம்பா் 25-ஆம் தேதி தில்லி காவல்துறையின் சைபா் குற்றப் பிரிவின் உளவுப் பிரிவான ஐஎஃப்எஸ்ஓ பிரிவு மூலம் இது தொடா்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த தாக்குதலைத் தொடா்ந்து புலனாய்வு அமைப்புகளின் பரிந்துரைகளின்படி இணைய சேவைகள் முடக்கப்பட்டது. மத்திய அரசின் ‘சொ்ட்-இன்’ என்கிற இந்திய கணினி அவசர நிலை நடவடிக்கைக் குழு, டிஆா்டிஓ, மத்திய புலனாய்வுத் துறை (ஐபி), சிபிஐ, என்.ஐ.ஏ. போன்ற முகமைகளும் விசாரணையை மேற்கொண்டன.

எய்ம்ஸின் இ-மருத்துவமனை சா்வா்களின் தரவுகள் கடந்த வாரம் மீட்டமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும் வைரஸால் பாதிக்கப்பட்ட சா்வா்கள், கணினிகள் முழுமையாக ஸ்கேன் செய்யப்பட்டு தயாா் செய்யப்பட்டுள்ளன. வைரஸ்களால் பாதிக்கப்பட்ட சா்வா்கள் கணினிகள் தனியாக பிரிக்கப்பட்டு மற்ற பாதிப்புக்குள்ளாகாத மற்ற சா்வா்கள் கணினிகள் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த தாக்குதலுக்கு ‘ரான்சம்வோ் கணினி வைரஸ்’ காரணமாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.