உக்ரைன் போர்: இந்தியர்களை மீட்கச் சென்றது விமானப் படை விமானங்கள்

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இந்திய விமானப் படை விமானங்கள் புறப்பட்டுச் சென்றன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இந்திய விமானப் படை விமானங்கள் புறப்பட்டுச் சென்றன.

உக்ரைனில் 7-வது நாளாக ரஷிய ராணுவப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவ், கார்கீவ் போன்ற முக்கிய நகரங்களில் குடியிருப்புப் பகுதிகள் மீதும் தாக்குதல் நடத்திய ரஷிய ராணுவம் சில இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

நேட்டோ படையில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த பிப். 24ஆம் தேதி முதல் ரஷிய ராணுவம் உக்ரைனின் பல்வேறு எல்லைப் பகுதிகள் வழியாக ஊடுருவி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.

இதனால் உக்ரைன் நாட்டிலிருந்து சுமார் 1.5 லட்சம் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். அந்நாட்டில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களும் அண்டை நாடுகளின் எல்லைகளை நோக்கி படையெடுத்துள்ளனர். 

மேலும், நேற்று(மார்ச்-1) உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம்  தலைநகர் கீவிலிருந்து உடனடியாக இந்தியர்கள் வெளியேற வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் கார்கிவ் நகரில் ரஷிய ராணுவத்தினரின் குண்டுவீச்சில் சிக்கி கர்நாடகத்தைச் சேர்ந்த மாணவர் நவீன்  பலியானாதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்ததால் இந்தியர்கள் நிலை குறித்தப் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், உக்ரைனிலுள்ள இந்தியர்களை மீட்க ஹிண்டன் விமான தளத்திலிருந்து ஹங்கேரி மற்றும் ருமேனியாவிற்கு இந்திய விமானப்படையைச் சேர்ந்த இரு விமானங்கள் புறப்பட்டுச் சென்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com