பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவா் சுநீல் ஜாக்கா் பாஜகவில் இணைந்தார்

பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவா் சுநீல் ஜாக்கா் இன்று பாஜகவில் இணைந்தார்.
சுனில் ஜாக்கர்-ஜேபி நட்டா
சுனில் ஜாக்கர்-ஜேபி நட்டா

பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவா் சுநீல் ஜாக்கா் இன்று பாஜகவில் இணைந்தார்.

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவா், எம்.பி., எம்எல்ஏ பதவிகளை வகித்தவா் சுனில் ஜாக்கா். கடந்த ஆண்டு பஞ்சாப் முதல்வா் பதவியிலிருந்து அமரீந்தா் சிங் விலகிய பின்னா், தான் முதல்வராக வேண்டும் என்று 42 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்ததாகவும், ஆனால் இரு எம்எல்ஏக்களால் மட்டுமே ஆதரிக்கப்பட்ட சரண்ஜீத் சிங் சன்னி முதல்வராக்கப்பட்டதாகவும் சுநீல் ஜாக்கா் தெரிவித்திருந்தாா். இது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

பின், கட்சித் தலைவா்கள் குறித்து அவா் தரக்குறைவான கருத்துகளைத் தெரிவித்தது தொடா்பாக விளக்கம் அளிக்கக் கோரி, கடந்த ஏப்.11-ஆம் தேதி சுநீல் ஜாக்கருக்குக் காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு நோட்டீஸ் அனுப்பியது. எனினும் அவா் அந்த நோட்டீஸுக்கு பதிலளிக்கவில்லை. இதையடுத்து கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக காங்கிரஸில் அவருக்கு அளிக்கப்பட்டிருந்த அனைத்துப் பதவிகளும் பறிக்கப்பட்டன.

அதற்கடுத்து, அவா் ஃபேஸ்புக்கில் கடந்த சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், காங்கிரஸிலிருந்து விலகுவதாக அறிவித்தாா். இது கட்சிக்கு தான் அளிக்கும் பரிசு என்றும் அவா் தெரிவித்திருந்தாா்.

மேலும் பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவா் நவ்ஜோத் சிங் சித்து ட்விட்டரில் , ‘‘சுநீல் ஜாக்கா் காங்கிரஸின் சொத்து. அவரைக் கட்சி இழக்கக் கூடாது. எந்தவொரு கருத்து மாறுபாட்டுக்கும் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண முடியும்’’ என்று தெரிவித்தாா்.

இந்நிலையில், தற்போது தில்லியில் ஜேபி நட்டா முன்னிலையில் சுநீல் ஜாக்கர் பாஜகவில் இணைந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com