ஹரியாணா: கைவிடப்பட்ட பை நிறைய தோட்டாக்கள்
ஹரியாணாவில் கைவிடப்பட்ட பை நிறைய தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோப்புப் படம்.

கோப்புப் படம்.
ஹரியாணாவில் கைவிடப்பட்ட பை நிறைய தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியாணா மாநிலம், யமுனா நகர் பழைய ஹமிதா பகுதியில் கேட்பாரற்று கிடந்த பையை இழுத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பை திடீரென திறந்ததில் அதிலிருந்த தோட்டாக்கள் கீழே சிதறின. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் பையை கைப்பற்றினர்.
அத்துடன் வெடிகுண்டை செயலிழக்க வைக்கும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் அப்பகுதி முழுவதும் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அந்த பை எங்கிருந்து வந்தது என்பது குறித்து தற்போது அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க- குடியரசுத் தலைவருக்கு கண்புரை அறுவைசிகிச்சை முடிந்தது
மேலும் அப்பகுதியில் இருந்து சில மண் மாதிரிகளையும் சேகரித்துள்ளோம் என காவல்துறையினர் தெரிவித்தனர். பையில் கிடந்த தோட்டாக்களின் எடை சுமார் 30 முதல் 35 கிலோ வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...