சீனாவில் புதிய உச்சம் தொட்டது கரோனா பாதிப்பு!

சீனாவில் ஒருநாள் கரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் புதிய உச்சம் தொட்டது கரோனா பாதிப்பு!

சீனாவில் ஒருநாள் கரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் முதல்முறையாக கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டது சீனாவில்தான். அதன்பிறகு உலகம் முழுவதும் பரவிய கரோனா தொற்றால் பல நாடுகள் சீரழிந்தது. லட்சக்கணக்கானோர் பலியாகினர்.

உலகம் முழுவதும் மூன்று அலைகள் ஏற்பட்ட போதிலும், கடுமையான பொதுமுடக்கத்தின் காரணமாக சீனா மட்டும் பெரும் பாதிப்பிலிருந்து தப்பித்தது.

இந்நிலையில், சமீபகாலமாக சீனாவில் உள்ள பல்வேறு மாகாணங்களில் கரோனா நோய்த் தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தாலும் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே உள்ளது.

நேற்று ஒரே நாளில் 31,454 பேருக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டதிலிருந்து இதுவே ஒருநாள் அதிக பாதிப்பாகும்.

தொடர்ந்து, பல்வேறு மாகாணங்களில் ஊரடங்கு, போக்குவரத்து கட்டுப்பாடு உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டு தீவிர கரோனா பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com