ஆம்புலன்ஸில் எரிபொருள் தீர்ந்துபோனதால் நோயாளி மரணம்

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் வழியில், ஆம்புலன்ஸில் எரிபொருள் காலியானதால், நோயாளி உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆம்புலன்ஸில் எரிபொருள் தீர்ந்துபோனதால் நோயாளி மரணம்
ஆம்புலன்ஸில் எரிபொருள் தீர்ந்துபோனதால் நோயாளி மரணம்
Updated on
1 min read

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் வழியில், ஆம்புலன்ஸில் எரிபொருள் காலியானதால், நோயாளி உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பன்ஸ்வாரா ஊரகப் பகுதிக்குள் சென்ற ஆம்புலன்ஸ், நோயாளியுடன் திரும்பிக் கொண்டிருந்த போது எரிபொருள் இல்லாமல் பாதி வழியில் நின்றது. அருகில் பெட்ரோல் நிலையம் இல்லாத நிலையில், ஆம்புலன்ஸிலேயே நோயாளி மரணமடைந்தார்.

40 வயது தேஜியா, திடிரென மயக்கமடைந்ததால், 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. நோயாளியை ஏற்றிக் கொண்டு ரட்லம் சாலையில் சென்று கொண்டிருந்த போது, மருத்துவமனையிலிருந்து 10 கிலோ மீட்டருக்கு முன்னதாக எரிபொருள் இல்லாமல் நின்றுபோனது.

உடனடியாக வேறு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அதில் நோயாளியை ஏற்றி மாவட்ட அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகக் கூறிவிட்டனர்.

இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று ராஜஸ்தான் சுகாதாரத் துறை கூறியிருந்தாலும், இதுவரை இது தொடர்பாக எந்தப் புகாரும் வரப்பெறவில்லை என்றும் கூறுகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com