சிஎன்ஜி பேருந்துகளைக் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார் கேஜரிவால்!

தலைநகர் தில்லியில் சிஎன்ஜியில் இயங்கும் 50 தாழ்தள குளிரூட்டப்பட்ட பேருந்துகளை அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கொடியசைத்து இன்று தொடங்கி வைத்தார். 
சிஎன்ஜி பேருந்துகளைக் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார் கேஜரிவால்!

தலைநகர் தில்லியில் சிஎன்ஜியில் இயங்கும் 50 தாழ்தள குளிரூட்டப்பட்ட பேருந்துகளை அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கொடியசைத்து இன்று தொடங்கி வைத்தார். 

பேருந்துகளை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது, 

ஏப்ரல் முதல் பாதையை ஒழுங்குபடுத்தும் இயக்கத்தைத் தொடங்கியுள்ளோம். 2023ஆம் ஆண்டுக்குள் தில்லியில் 1,800 மின்சார பேருந்துகளும், 2025ஆம் ஆண்டில் நகரில் 80 சதவீத மின்சார பேருந்துகள் இயக்கப்படும். 

1,500 பேருந்துகளுக்கான டெண்டரை அரசு எடுத்துள்ளது. அடுத்தாண்டு நவம்பர் மாதத்திற்குள், இதுபோன்ற 1,800 பேருந்துகள் தில்லி சாலைகளில் இயக்கப்படும்.

அதன்படி, 50 சிஎன்ஜியில் இயங்கும் புதிய தாழ்தள குளிரூட்டப்பட்ட(ஏ.சி) பேருந்துகள் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்துத் துறையின் அமலாக்கப் பிரிவுக்கான 30 இன்னோவா கார்கள் மற்றும் 36 இருசக்கர வாகனங்களும் தொடங்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக சரியான பேருந்துகள் இல்லாததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். ஆனால் கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் மின்சார, சிஎன்ஜி, கிளஸ்டர் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

தற்போது இயக்கப்பட்டுள்ள புதிய பேருந்துகள் பவானா பேருந்து நிறுத்தத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது கிராமப்புற இணைப்புக்கு பெரிதும் உதவும். ஏற்கனவே 360 கிளஸ்டர் வழித்தடங்கள் உள்ளன.

இந்த பேருந்துகள் கிராமப்புறங்களுக்குச் சேவை செய்யும் வகையில் ஆறு புதிய வழித்தடங்களும் அமைக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com