காஸியாபாத் பலாத்கார வழக்கில் திடீர் திருப்பம்: சொத்துத் தகராறா?

தில்லியில், காஸியாபாத்தைச் சேர்ந்த 38 வயது பெண், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட சம்பவத்தில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
காஸியாபாத் பலாத்கார வழக்கில் திடீர் திருப்பம்: சொத்துத் தகராறாம்
காஸியாபாத் பலாத்கார வழக்கில் திடீர் திருப்பம்: சொத்துத் தகராறாம்

மீரட்: தில்லியில், காஸியாபாத்தைச் சேர்ந்த 38 வயது பெண், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட சம்பவத்தில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இரு குடும்பத்துக்கு இடையே இருக்கும் சொத்துத் தகராறில், ஒரு தரப்பை காவல்துறையிடம் சிக்கவைப்பதற்காக, பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக சித்தரிக்கப்பட்டு, காவல்துறையினரை நம்ப வைத்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில், சதி திட்டம் தீட்டியதாக, பெண்ணுடன் தொடர்புடைய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பாலியல் புகார் கொடுத்த பெண்ணுக்கு, ஆசாத், கௌரவ் உள்ளிட்ட மூன்று பேருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் பெண்ணுக்கு எதிராக சொத்துத் தகராறில் ஈடுபட்டவர்கள் மீது பாலியல் பலாத்கார புகார் அளிக்க சதி திட்டம் தீட்டியுள்ளனர். மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சதியில் பெண்ணும் சம்பந்தப்பட்டிருப்பதால், அவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீரட் மண்டல காவல்துறை ஆய்வாளர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல்அறிந்ததும் நந்திகிராம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் தொடர்புடைய மூன்று பேரை கைது செய்ததாக ஐ.ஜி. தெரிவித்துள்ளார்.

ஒரு கோணிப்பையில், ரத்த வெள்ளத்தில் மிதந்த பெண்ணை காவல்துறையினர் மீட்டதாகவும், அப்பெண்ணை 5 பேர் கடத்திச் சென்று இரண்டு நாள்கள் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இதில் தொடர்புடைய கார் உள்ளிட்ட சில தடயங்கள் சேகரிக்கப்பட்டன. விசாரணை தொடங்கியது. பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான பெண் அளித்த தகவலில், பலாத்காரம் செய்த அனைவரையும் தனக்கு நன்கு தெரியும் என்று அடையாளம் கூறினார்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்களுக்கும் அப்பெண்ணின் தரப்புக்கும் சொத்து தகராறு இருந்ததும், அது நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருவதும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்ததாக பிரவீன் குமார் கூறியுள்ளார்.

எனவே, தனக்கு எதிராக சொத்துத் தகராறில் ஈடுபட்டவர்கள் மீது, கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்து காவல்துறையிடம் சிக்க வைக்க பெண் உள்பட நான்கு பேரும் திட்டமிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com