விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கண்ணூரில் ஆர்எஸ்எஸ் தொண்டர் வீடு அருகே குண்டு வெடிப்பு

கண்ணூரில் ஆர்எஸ்எஸ் தொண்டர் வீடு அருகே வியாழக்கிழமை இரவு நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :10 செப்டம்பர் 2022, 10:50 am

DIN

கண்ணூரில் ஆர்எஸ்எஸ் தொண்டர் வீடு அருகே வியாழக்கிழமை இரவு நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மட்டனூர் போலீசார் கூறுகையில், ஆர்எஸ்எஸ் தொண்டரான சுதீஷ் என்பவரது வீட்டில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் வியாழக்கிழமை இரவு வெடிகுண்டு வெடித்தது. நிகழ்விடத்துக்கு வந்த தடயவியல் குழுவினர் தடயங்களை சேகரித்தனர். 

சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மேலும் மாவட்ட காவல்துறை தலைவரும் சம்பவ இடத்தை பார்வையிட்டார். சுதீஷ் மீது பல வழக்குகள் உள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதனிடையே மற்றொரு சம்பவத்தில், கண்ணவத்தில் உள்ள எஸ்டிபிஐ கட்சியின் முன்னாள் தொண்டர் சலாவுதீன் வீட்டின் அருகே வெள்ளிக்கிழமை வெடிகுண்டு வெடித்தது. இதுகுறித்தும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.