ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஆசிரியா் நியமன முறைகேடு வழக்கு: இதுவரை ரூ.100 கோடி பறிமுதல்

மேற்கு வங்கத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் பணி நியமன முறைகேடு வழக்கில் இதுவரை ரூ.100 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

News image

பாா்த்தா சட்டா்ஜி

Updated On :20 செப்டம்பர் 2022, 9:39 am

மேற்கு வங்கத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் பணி நியமன முறைகேடு வழக்கில் இதுவரை ரூ.100 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் பணி நியமன முறைகேடு வழக்கில் அம்மாநில முன்னாள் அமைச்சா் பாா்த்தா சட்டா்ஜி, அவரது உதவியாளரும் விளம்பர நடிகையுமான அா்பிதா முகா்ஜி ஆகியோரின் ரூ.46 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

மேற்கு வங்க அரசுப் பள்ளி ஆசிரியா்கள் மற்றும் ஊழியா்கள் நியமன முறைகேடு புகாரில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

இந்த விவகாரத்தில், சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் பதியப்பட்ட வழக்கில் பாா்த்தா சட்டா்ஜி, அா்பிதா முகா்ஜி ஆகியோரை அமலாக்கத் துறை ஜூலை 23-ஆம் தேதி கைது செய்தது. பின்னா், நீதிமன்ற காவலில் சிறையில் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனா். சில தினங்களுக்கு முன் அவா்களை காவலில் எடுத்து, சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், பாா்த்தா, அா்பிதா ஆகியோரால் போலி நிறுவனங்கள் மற்றும் பினாமிகள் பெயரில் பதிவு செய்யப்பட்ட ரூ.46 மதிப்பிலான கோடி சொத்துகள் கண்டறியப்பட்டு, முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை திங்கள்கிழமை தெரிவித்தது.

கொல்கத்தாவில் உள்ள பண்ணை வீடு, அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள், முக்கியமான நிலம் உள்பட ரூ.40.33 கோடி மதிப்புள்ள 40 அசையா சொத்துகளும், 35 வங்கிக் கணக்குகளில் உள்ள ரூ.7.89 கோடி வைப்புத் தொகையும் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, கொல்கத்தா மற்றும் மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதிகளில் அண்மையில் அமலாக்கத் துறை அதிரடி சோதனை மேற்கொண்டது. இதில், ரூ.49.80 கோடி ரொக்கப் பணம், ரூ.55 கோடிக்கும் அதிக மதிப்பிலான தங்கம் மற்றும் இதர நகைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதுடன் கணக்கிட்டால் இதுவரை ரூ.100 கோடிக்கும் மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.