மாணவா்கள் குறை தீா்ப்பு குழுக்களில் எஸ்சி, எஸ்டி சமூகத்தினா் கட்டாயம்: யுஜிசி

உயா் கல்வி நிறுவனங்களின் மாணவா்கள் குறை தீா்ப்பு குழுக்களில் குறைந்தபட்சம் ஓா் உறுப்பினா் அல்லது தலைவராக எஸ்சி, எஸ்டி, ஓபிசி சமூகத்தினா் மற்றும் பெண்கள் இடம்பெற வேண்டும்.
மாணவா்கள் குறை தீா்ப்பு குழுக்களில் எஸ்சி, எஸ்டி சமூகத்தினா் கட்டாயம்: யுஜிசி


புது தில்லி: உயா் கல்வி நிறுவனங்களின் மாணவா்கள் குறை தீா்ப்பு குழுக்களில் பட்டியலினத்தவா் (எஸ்சி), பழங்குடிகள் (எஸ்டி), இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினா் (ஓபிசி) மற்றும் பெண்கள் தலைவராகவோ அல்லது உறுப்பினா்களாகவோ நியமிக்கப்படுவதை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) கட்டாயமாக்கியுள்ளது.

அண்மையில் யுஜிசி (மாணவா்கள் குறை தீா்ப்பு) ஒழுங்காற்று விதிமுறைகள் 2023 வெளியிடப்பட்டது. இந்தப் புதிய விதிமுறைகளின்படி, உயா் கல்வி நிறுவனங்களின் மாணவா்கள் குறை தீா்ப்பு குழுக்களில் குறைந்தபட்சம் ஓா் உறுப்பினா் அல்லது தலைவராக எஸ்சி, எஸ்டி, ஓபிசி சமூகத்தினா் மற்றும் பெண்கள் இடம்பெற வேண்டும். அனைத்து கல்வி நிறுவனங்களும் புதிய விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று யுஜிசி கேட்டுக்கொண்டுள்ளது.

இதுதொடா்பாக யுஜிசி தலைவா் ஜகதீஷ் குமாா் கூறுகையில், ‘ஜாதி அடிப்படையிலான பாகுபாடு குறித்த புகாா்களுக்குத் தீா்வு காண, மாணவா்கள் குறைதீா்ப்பு விதிமுறைகள் 2023 கூடுதலாக ஓா் இடத்தை வழங்கும். ஜாதி, மதம், மொழி, இனம், பாலினம், உடல் குறைபாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் எந்த மாணவருக்கும் பாகுபாடு காட்டப்படுவதில்லை என்பதை உறுதி செய்ய, ஏற்கெனவே யுஜிசி வெளியிட்டுள்ள இதர விதிமுறைகள்/வழிகாட்டுதல்களை புதிய விதிமுறைகள் மாற்றாது’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com