
ஹிமாசலப் பிரதேசத்தில் உள்ள சோலன் மாவட்டத்தின் ஜாடோன் கிராமத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பில் சிக்கி 7 பேர் பலியாகினர்.
ஞாயிறு இரவு ஏற்பட்ட மேகவெடிப்பில் இரண்டு வீடுகள் அடித்துச்செல்லப்பட்டு, அதிலிருந்த 6 பேர் மீட்கப்பட்டனர். மேலும் 3 பேரை காணவில்லை.
இறந்தவர்கள் ஹர்னம் (38), கமல் கிஷோர் (35), ஹெம்லாட்டா (34), ராகுல் (14), நேஹா (12), கோலு (8) மற்றும் ரக்ஷா (12) என அடையாளம் காணப்பட்டனர் .
ஹிமாசலில் கடந்த 24 மணி நேரமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், மாநிலத்தின் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி 16 பேர் பலியாகியுள்ளனர்.
அதேசமயம் சிம்லாவில் சிவன் கோயில் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.
மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்துவருவதால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.