சிம்லாவில் 4வது நாளாகத் தொடரும் மீட்புப் பணி: இதுவரை 14 உடல்கள் மீட்பு!

சிம்லாவின் சம்மர் ஹில் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களில் இதுவரை 14 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. 
சிம்லாவில் 4வது நாளாகத் தொடரும் மீட்புப் பணி: இதுவரை 14 உடல்கள் மீட்பு!

சிம்லாவின் சம்மர் ஹில் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களில் இதுவரை 14 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. 

ஹிமாசல், தலைநகர் சிம்லாவில் உள்ள சம்மர் மலையில் சிவன் கோயில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் கனமழையால் கோயில் இடிந்து விழுந்ததில் இன்று காலை ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தம் 14 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. 

மேலும் சிலர் இடிபாடுகளுக்கு இடையே சிக்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தின்போது கோயிலில் சுமார் 25-30 பேர் வரை இருந்துள்ளனர். தொடர்ந்து மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த சம்பவத்தையடுத்து, அதேநாளில் நிலச்சரிவு மற்றும் மேகவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேகவெடிப்பில் சிக்கி 5 பேர் பலியாகினர். மேலும் மூவர் காணாமல் போயுள்ளனர். சிம்லாவில் உள்ள பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கிருஷ்ணா நகர் பகுதியில் 5 வீடுகள் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர்.

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத மோசமான இயற்கை பேரிடரை மாநிலம் எதிர்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com