வைரத்தைப் பட்டை தீட்டும் சூரத் சிறைக் கைதிகள்: ஊதியம் ரூ.20 ஆயிரம்

அவர்களது வாழ்வு ஜொலிக்காவிட்டாலும் கூட, அவர்கள் தேர்ந்தெடுத்து பட்டை தீட்டும் வைரங்கள் ஒன்று கூட ஜொலிக்காமல் போய்விடுவதில்லை.
வைரத்தைப் பட்டை தீட்டும் சூரத் சிறைக் கைதிகள்: ஊதியம் ரூ.20 ஆயிரம்

சூரத்: அவர்களது வாழ்வு ஜொலிக்காவிட்டாலும் கூட, அவர்கள் தேர்ந்தெடுத்து பட்டை தீட்டும் வைரங்கள் ஒன்று கூட ஜொலிக்காமல் போய்விடுவதில்லை.

குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள லஜ்போர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள், மாதந்தோறும் சராசரியாக 25,0000 சிறிய இயற்கை வைரங்களைப் பட்டை தீட்டி விற்பனைக்கு அனுப்புகிறார்கள்.

உலகின் வைரத் தேவையில் 95 சதவீதத்தை பூர்த்தி செய்வது இந்த வைர நகரமான சூரத் தான். இந்த நகரில் அமைந்துள்ள சிறைக் கூடம் சிறியதுதான். ஆனால், இந்த 95 சதவீத வைர உற்பத்தியில், இவையும் மிகப்பெரிய பங்கெடுத்துக் கொள்கின்றன. சிறைச்சாலையில் அமைந்துள்ள வைரம் பட்டை தீட்டும் ஆலையில் 107  சிறைக் கைதிகள் நாள்தோறும் பணியாற்றுகிறார்கள். 

இவர்களுக்கு இதற்கென சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு, பட்டை தீட்டுதல், வைரத்தை வெட்டுவது போன்றப் பணிகளை செய்து மாதந்தோறும் சிறைச்சாலையில் இருந்துகொண்டே ரூ.20 ஆயிரம் வரை சம்பளம் ஈட்டுகிறார்கள்.

உலகிலேயே, வைரம் பட்டை தீட்டும் ஆலை செயல்படுவது இந்த சிறைச்சாலையில்தான் என்று சொன்னால் அது தவறாக இருக்காது என்றே புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

சுமார் 3 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் இந்த சிறைச்சாலையில், தற்போது ஏராளமான தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. இங்கிருந்தே அவர்கள் மாதந்தோறும் பல ஆயிரம் வருவாய் ஈட்டுகிறார்கள. அதில் மாதந்தோறும் அவர்கள் ரூ.2100 வரை தங்களது தேவைக்காக செலவு செய்யலாம். மற்றவை சேமிப்பாக மாறும் அல்லது அவர்களது குடும்பங்களுக்கு மாதந்தோறும் அனுப்பிவைக்கப்படும்.

இதன் மூலம், குற்றங்கள் செய்து சிறைக்கு வந்தவர்களும், நல்ல பயிற்சி மற்றும் வருவாய் மூலம், சிறையில் இருந்து திரும்பினால், மீண்டும் குற்றங்களைச் செய்யாமல், வைரம் பட்டை தீட்டி நல்ல ஊதியம் பெறும் வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மின்னுவதெல்லாம் பொன் அல்ல.. வைரமாகக் கூட இருக்கலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com