லடாக் சென்றுள்ள ராகுல் காந்தி, கார்கில் போர் நினைவிடத்தில் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ஒற்றுமை நடைப்பயணத்தைத் தொடர்ந்து, தான் செல்லாத மேலும் சில பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்துப் பேசி வருகிறார்.
அதன்படி லாடக் சென்றுள்ள ராகுல் காந்தி, அங்குள்ள மக்களை சந்தித்துப் பேசி வருகிறார். லே பகுதியில் முன்னாள் ராணுவ வீரர்களுடன் உரையாடினார்.
தொடர்ந்து இன்று லடாக்கின் கார்கில் பகுதியில் நடைபெற்ற மிகப்பெரிய பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார்.
அப்போது நாட்டின் ஒரு அங்குல நிலத்தைக் கூட சீனா எடுக்கவில்லை என்று பிரதமர் மோடி பொய் சொல்லியிருப்பதாகத் தெரிவித்தார்.
லடாக்கின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று மக்களைச் சந்தித்து அவர்களின் குரலைக் கேட்டதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து, கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.