தெலங்கானா காங்கிரஸ் தலைவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த டிஜிபி பணியிடை நீக்கம்!

தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியை சந்தித்த காவல்துறை தலைவர் அஞ்சனி குமாரை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை
ஹைதராபாத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து வாழ்த்து தெரிவித்த தெலங்கானா காவல்துறை தலைவர் அஞ்சனி குமார் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சய் குமார் ஜெயின்.
ஹைதராபாத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து வாழ்த்து தெரிவித்த தெலங்கானா காவல்துறை தலைவர் அஞ்சனி குமார் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சய் குமார் ஜெயின்.

ஹைதராபாத்: தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்த போது, தேர்தல் நடத்தை விதிகளை மீறி தேர்தலில் போட்டியிடும் தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியை சந்தித்த காவல்துறை தலைவர் அஞ்சனி குமாரை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்குமாறு தெலங்கானா தலைமைச் செயலாளருக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கா் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை (டிச. 3) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. 

மத்திய பிரதேசம், ராஜஸ்தான்,சத்தீஸ்கா் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை பின்னுக்குத் தள்ளி பாஜக முன்னிலையில் இருந்து வருகின்றன. மும்முனைப் போட்டி நிலவிய தென் மாநிலமான தெலங்கானாவில் ஆளும் பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்)கட்சியை அகற்றி தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி அரியணையில் ஏறுகிறது.

இந்த நிலையில், தெலங்கானாவில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக, தெலங்கானா காவல்துறைத் தலைவர் அஞ்சனி குமார் மற்றும் மாநில காவல்துறை அதிகாரி சஞ்சய் ஜெயின் ஆகியோர் தேர்தலில் போட்டியிடும் தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனார்.

இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக டிஜிபி அஞ்சனி குமாரை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்குமாறு தெலங்கானா தலைமைச் செயலாளர் சாந்தி குமாரிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

டிஜிபி அஞ்சனி குமாமருடன் ரேவந்த் ரெட்டியை சந்திக்க சென்ற மேலும் 2 காவல்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்த போது, தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியை சந்தித்ததால் இந்த நடவடிக்கைக்கு பரிந்துரை செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com