பெற்றோர் சம்மதம் இல்லாமல் காதல் திருமணங்கள் கூடாது : பா.ஜ.க. எம்பி!

காதல் திருமணங்களில் பெற்றோரின் சம்மதம் கட்டாயமாக்கப்பட வேண்டும் என பா.ஜ.க. எம்பி தெரிவித்துள்ளார். 
பெற்றோர் சம்மதம் இல்லாமல் காதல் திருமணங்கள் கூடாது : பா.ஜ.க. எம்பி!

காதல் திருமணம் செய்வதற்கு பெற்றோரின் சம்மதம் கட்டாயமாக்கப்பட வேண்டும் என மக்களவையில் பேசிய பா.ஜ.க. எம்பி தராம்பீர் சிங் தெரிவித்துள்ளார். 

பெற்றோரால் திருமணம் செய்து வைக்கப்படுவதே நாட்டின் நீண்டகால வழக்கமாக இருந்து வருகிறது எனவும், காதல் திருமணங்கள் விவாகரத்துக்கு வழி வகுக்கின்றன எனவும் கூறியுள்ளார். இருவரின் சமூகப் பிரிவுகளை பொறுத்தே திருமணங்கள் செய்து வைக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.

நாட்டின் கலாச்சாரத்தைக் காக்க, காதல் திருமணங்களில் பெற்றோரின் விருப்பம் கட்டாயமாக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார். காதல் திருமணத்தில் இருவேறு பிரிவுகள் கலப்பதாகவும் அதனால் கிராமங்களில் பல்வேறு பிரச்னைகள் நிகழ்வதாகவும் அவர் கூறியுள்ளார். 

மேலும், லிவ் இன் உறவுகள் (live-in relationships) இந்த நாட்டிற்குப் பிடித்த நோய், அவை சட்டத்திற்குப் புறம்பானதாக அறிவிக்கப்பட வேண்டும் எனவும் சிங் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com