வெளிநாட்டவர்களுக்கு நிலத்தை விற்க மாட்டோம் என அசாம் மக்கள் உறுதியளிக்க வேண்டும்: முதல்வர் ஹிமந்தா

பழங்குடியின மக்களின் கலாசாரம் மற்றும் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக, "சந்தேகத்திற்குரிய வெளிநாட்டவருக்கு" தங்கள் நிலத்தை விற்க மாட்டோம் என்று அசாம் மக்கள் உறுதியளிக்க வேண்டும்
வெளிநாட்டவர்களுக்கு நிலத்தை விற்க மாட்டோம் என அசாம் மக்கள் உறுதியளிக்க வேண்டும்: முதல்வர் ஹிமந்தா

குவஹாட்டி: பழங்குடியின மக்களின் கலாசாரம் மற்றும் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக, "சந்தேகத்திற்குரிய வெளிநாட்டவருக்கு" தங்கள் நிலத்தை விற்க மாட்டோம் என்று அசாம் மக்கள் உறுதியளிக்க வேண்டும் என்று மாநில மக்களுக்கு முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஞாயிற்றுக்கிழமை வேண்டுகோள் விடுத்தார்.

குவஹாட்டியில் உள்ள போராகவ்னில், அசாம் போராட்டத்தின் தியாகிகளின் நினைவாக அனுசரிக்கப்படும் 'ஸ்வாஹித் திவாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய முதல்வர் ஹிமந்த் பிஸ்வா சர்மா, பழங்குடியின மக்களின் கலாசாரம் மற்றும் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக, "அசாம் மக்கள் ஒவ்வொருவரும் தங்களது நிலத்தை சந்தேகத்திற்குரிய வெளிநாட்டவருக்கு விற்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்தால் நமது சமூகம் பாதுகாக்கப்படும்.

சில குடும்பங்கள் தங்கள் நிலத்தை பொருளாதார நலனுக்காக விற்கிறார்கள், ஆனால் பல குடும்பங்களுக்கு பணம் தேவையில்லை, ஆனால் அவர்கள் சந்தேகத்திற்குரிய வெளிநாட்டவர்களுக்கு நிலத்தை விற்கிறார்கள்.

எனவே, "எங்கள் நிலத்தை இனி சந்தேகப்படும்படியான வெளிநாட்டவருக்கு விற்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுப்போம்," என்று கூறியவர், மஜூலி, பர்பேட்டா மற்றும் படத்ராவா போன்ற இடங்களில் "வெளியூர்காரர்களுக்கு" நிலத்தை விற்பனை செய்வதைத் தடைசெய்யும் சட்டத்தை அரசு கொண்டு வரும் என கூறினார். 

மேலும், 1985 ஆகஸ்டில் அசாம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம், சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எதிரான ஆறு ஆண்டுகால போராட்டத்துடனான தனது தொடர்பு குறித்து பேசிய சர்மா, அந்தப் போராட்டம் வெறும் உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டதல்ல, தர்க்கத்தையும் அடிப்படையாகக் கொண்டது. போராட்டத்தின் பல தலைவர்கள் அசாம் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைய வேண்டும் என்று கனவு கண்டனர்.

ஆனால் மாநில இளைஞர்களின் வேலை செய்ய விருப்பமின்மையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட வெளிநாட்டினர் முக்கியமான இடங்களில்  வர்த்தகத்தை கைப்பற்றியுள்ளனர்.

எந்தவொரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் நிதி வளர்ச்சியின் முக்கியத்துவம், கலாசாரம் மற்றும் மொழியைப் பாதுகாப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எவ்வளவு முக்கியம் வாய்ந்தது என்பதை வலியுறுத்திய சர்மா, மக்கள், குறிப்பாக இளைஞர்கள், பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்க வேண்டும். இளைஞர்கள் கடினமாக உழைக்க வேண்டும் மற்றும் உழைப்பின் கண்ணியத்தைப் பாராட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் சில மேசடி நபர்களுக்காக, தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (என்ஆர்சி) புனிதத்தன்மையை கெடுக்கும் வகையில் சில அதிகாரிகள் மோசடியாக (சந்தேகத்திற்குரிய வெளிநாட்டினர்)பெயர்களை சேர்த்துள்ளனர். அவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்று முதல்வர் சர்மா கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com