

மத்திய பிரதேசத்தின் துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜகதீஷ் தேவ்தாவுக்கு சிவராஜ் சிங் சௌகான் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது: பாஜகவின் ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய பிரதேசத்தின் துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜகதீஷ் தேவ்தாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலில் உங்களது திட்டங்கள் மத்திய பிரததேசத்தின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்களிக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
சிவராஜ் சிங் சௌகானின் இந்த வாழ்த்துக்கு பதிலளித்த ஜகதீஷ் தேவ்தா, மதிப்புக்குரிய சகோதரரே, உங்களது வாழ்த்துக்கும் அன்புக்கும் எனது மனமார்ந்த நன்றி. உங்களது அன்பு மற்றும் வழிகாட்டுதல் எப்போதும் எங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
ஜகதீஷ் தேவ்தா மட்டுமின்றி, மத்திய பிரதேசத்தின் மற்றொரு துணை முதல்வராக ராஜேஷ் சுக்லா தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.