தங்கம் பவுனுக்கு மேலும் ரூ.80 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 உயர்ந்து பவுன் ரூ.46,640-க்கு விற்பனையாகிறது.


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 உயர்ந்து பவுன் ரூ.46,640-க்கு விற்பனையாகிறது.
சென்னையில் கடந்த மூன்று நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை வியாழக்கிழமை ஒரே நாளில் அதிரடியாக பவுனுக்கு ரூ.960 உயர்ந்து பவுன் ரூ.46,560-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், தங்கம் விலை தொடா்ந்து 2-ஆவது நாளாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ. 5,830-க்கும், பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ. 46,640-க்கும் விற்பனையாகிறது.
இதேபோன்று வெள்ளி விலை வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.2.50 காசுகள் உயர்ந்து கிராம் ரூ.79.50-க்கு விற்பனையானது.
இந்த நிலையில்,வெள்ளிக்கிழமை வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து கிராம் ரூ.80.50-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1000 உயர்ந்து ரூ. 80,500-க்கும் விற்பனையாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...