‘சித்தா’ படக் கதை நிஜமான சம்பவம்...9 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை!
வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த பெண் குழந்தை கடத்திச் செல்லப்பட்டதாகக் காவலர்களுக்குப் புகார் கொடுக்கப்பட்டது. இது குறித்து காவலர்கள் விசாரித்து வந்தனர்.


புது தில்லி: ஒன்பது வயது பெண் குழந்தை கடத்தப்பட்டு பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
டிச.12 அன்று தில்லி ஸ்வரூப் நகர் பகுதியில் ஒன்பது வயது குழந்தை கடத்தப்பட்டதாக அவர்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. சட்டப்பிரிவு 363-ன் கீழ் வழக்குப் பதிவு செய்த காவலர்கள் குழந்தையையும் கடத்தி சென்ற 52 வயது மனிதரையும் தேடத் தொடங்கியுள்ளனர்.
குழந்தையின் பெற்றோர் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளனர். வீட்டிற்கு வெளியே குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது கடத்தப்பட்டிருக்கலாம் என பெற்றோர்கள் தெரிவித்தனர்.
டிச.12 அன்று குற்றம் சாட்டப்பட்டவரின் வாகனத்தில் குழந்தை அமர்ந்திருந்தது விசாரணையில் தெரிய வந்தது.
இந்தத் தேடுதலுக்கிடையே குற்றம் சாட்டப்பட்ட நபர் சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குற்றம் சுமத்தப்பட்ட நபர் குற்றத்தை ஒத்துக் கொண்டதுடன் அந்தக் குழந்தையின் சடலத்தை முனக் கால்வாயில் வீசியதாகவும் தெரிவித்தார்.
குழந்தையின் சடலத்தைத் தேடும் பணியில் காவல்துறை ஈடுபட்டுள்ளது. கடத்தல், கொலை, சாட்சியங்களை அழித்தல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...