இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் போராட்டம்?

பாதுகாப்பு அத்துமீறல் குறித்து அமளியில் ஈடுபட்ட எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து எம்.பிக்கள் போராட்டத்தைக் கையில் எடுக்க உள்ளனர்.
பாதுகாப்பு அத்துமீறல் | கோப்பு
பாதுகாப்பு அத்துமீறல் | கோப்பு

புதுதில்லி: இந்தியா கூட்டணி கட்சிகளின்  இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள், நாளை (வியாழக்கிழமை) இடைநீக்க நடவடிக்கையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இந்தப் போராட்டத்தில் ‘மாதிரி நாடாளுமன்றம்’ அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் இதற்கான திட்டமிடுதல் கூட்டம் புதன்கிழமை நடைபெறவுள்ளது.

ஜந்தர் மந்தரில் நடக்கவிருக்கும் இந்தப் போராட்டத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட 140 எம்.பி.க்களும் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாதிரி நாடாளுமன்றத்தில்  ராஷ்ட்ரிய ஜனதா தள எம்.பி. மனோஜ், அவைத் தலைவராக இருப்பார் எனத் தெரிகிறது.

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அத்துமீறல் குறித்து அமளியில் ஈடுபட்டதாக 140-க்கும் அதிகமான எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com