
மத்திய பிரதேச அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படும் என்று அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ராஜ்பவனில் ஆளுநர் மங்குபாய் படேலை முதல்வர் மோகன் யாதவ் இன்று காலை சந்தித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இன்று பிற்பகல் 3:30 மணிக்கு, புதிய அமைச்சர்கள் பதவியேற்கின்றனர். அவர்களுக்கு, ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
புதிய அமைச்சரவை மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபடும். இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. புதிய முதல்வராக இதர பிற்படுத்தப்பட்ட பிரிவை (ஓபிசி) சோ்ந்த மோகன் யாதவும் (58), துணை முதல்வா்களாக ஜகதீஷ் தேவ்டா, ராஜேந்திர சுக்லா ஆகியோரும் பதவியேற்றனா்.
முன்னதாக, மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு போபாலில் அவரது உருவப்படத்திற்கு முதல்வர் மோகன் யாதவ் இன்று காலை அஞ்சலி செலுத்தினார்.
1924 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் பிறந்த வாஜ்பாய், மூன்று முறை நாட்டின் பிரதமராகப் பதவி வகித்தார். அவர் ஆகஸ்ட் 16, 2018 அன்று புது தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.