மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மும்பையில் தொடர் வெடிகுண்டு தாக்குதல்கள் நடக்கும்!: மர்ம நபர் அளித்த தகவல்!

மும்பையின் பல இடங்களில் தொடர் வெடிகுண்டு சம்பவங்கள் நடக்கவிருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்.
Updated On :31 டிசம்பர் 2023, 6:51 am

DIN

மும்பையில் பல இடங்களில் தொடர் வெடிகுண்டு சம்பவங்கள் நடக்கவிருப்பதாக மும்பை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சனிக்கிழமை மாலை 6 மணியளவில் மர்ம நபர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து மும்பையில் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மும்பையின் பொது இடங்கள் அனைத்திலும் பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்பட்டதாகவும், இதுவரை எந்த வெடிபொருள்களும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்ட நபரைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

மேலும், கடந்த டிசம்பர் 27 அன்று ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது. விமான நிலைய அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் பாதுகாப்பு சோதனைகள் காவல்துறையினரால் நடத்தப்பட்டன.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.