புது தில்லி: வழக்குரைஞா் விக்டோரியா கெளரி சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக இன்று பதவியேற்கவிருக்கும் நிலையில், அவருடைய நியமனத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்.
விக்டோரியா கௌரி நியமனத்துக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணை தொடங்கியருக்கிறது.
இதையும் படிக்க.. பழைய வரி - புதிய வரி: எந்த முறை உங்களுக்கு சிறந்தது?
சென்னை உயா்நீதிமன்ற மூத்த வழக்குரைஞா்கள் சிலா் சாா்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜெ.பி.பாா்திவாலா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு மூத்த வழக்குரைஞா் ராஜு ராமச்சந்திரன் திங்கள்கிழமை முறையிட்டாா். இதையடுத்து, இன்று காலை 9.15 மணியளவில் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
‘சென்னை உயா்நீதிமன்ற மூத்த வழக்குரைஞா்கள் சாா்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மீது இடைக்கால உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். எனவே, இந்த மனுவை விரைந்து விசாரணைக்கு ஏற்க வேண்டும்’ என்று கோரியிருந்தார்.
இதையும் படிக்க.. கேரளத்தில் முதல் முறை.. தாயாகியிருக்கும் திருநம்பி
இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்த மனு வரும் 10-ஆம் தேதி விசாரணைக்குப் பட்டியலிடப்படும்’ என்று உத்தரவிட்டனா்.
இந்தச் சூழலில் விக்டோரியா கெளரி உள்பட 11 வழக்குரைஞா்கள் மற்றும் 2 மாவட்ட நீதிபதிகளை உயா்நீதிமன்றங்களின் கூடுதல் நீதிபதிகளாக நியமித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு திங்கள்கிழமை வெளியானது.
அதனைத் தொடா்ந்து, ‘மத்திய அரசின் நியமன உத்தரவு வெளிவந்துள்ளதை சுட்டிக்காட்டி, விக்டோரியா கெளரி நியமனத்துக்கு எதிரான மனுவை உடனடியாக விசாரணைக்கு ஏற்க வேண்டும்’ என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமா்வில் வழக்குரைஞா் ராஜு ராமச்சந்திரன் சாா்பில் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.
இதனைக் கேட்ட நீதிபதிகள் அமா்வு, ‘இந்த மனு செவ்வாய்க்கிழமை (பிப். 7) விசாரணைக்குப் பட்டியலிடப்படுகிறது. இதற்கென தனி அமா்வு அமைக்கப்படும்’ என்றனா்.
இதையும் படிக்க.. சென்னையில் மீண்டும் டிராம் ரயில்கள்?
கடும் எதிர்ப்பு..
சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட வழக்குரைஞா் விக்டோரியா கெளரிக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
‘இவருடைய பரிந்துரையை உச்சநீதிமன்ற கொலீஜியம் திரும்பப் பெற வேண்டும்’ என்று சென்னை உயா்நீதிமன்ற மூத்த வழக்குரைஞா்கள் சிலா் எதிா்ப்பு தெரிவித்தனா். இதுதொடா்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலீஜியத்திடமும், குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முக்கும் அவா்கள் சாா்பில் மனு அனுப்பப்பட்டது. இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தனா்.
இதையும் படிக்க.. விக்டோரியா கௌரிக்கு எதிரான வழக்கை ஏற்க முடியாது: உச்ச நீதிமன்றம்
‘தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பது ஜிகாத்தா அல்லது கிறிஸ்தவ அமைப்புகளா என்ற தலைப்பிலும், இந்தியாவில் கிறிஸ்தவ அமைப்புகள் கலாசார படுகொலை செய்வதாகவும் வழக்குரைஞா் விக்டோரியா கெளரி பேசிய காணொலி சமூக வலைதளங்களில் உள்ளது’ என்று தங்களது மனுவில் மூத்த வழக்குரைஞா்கள் குறிப்பிட்டிருந்தனா்.
உயா்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்படுபவா்களுக்கு 2 ஆண்டுகளுக்குப் பிறகு நிரந்தர நீதிபதிகளாகப் பதவி உயா்வு அளிக்கப்படுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
கோவில்பட்டி அருகே புது மாப்பிள்ளை தற்கொலை

ஏா்வாடியில் இப்தாா் நோன்பு
சிறுமி கடத்தல்: மூவா் கைது

பிரதமா் மோடிக்கு வெள்ளி வேல் அளித்த முதல்வா் ரங்கசாமி:
வீடியோக்கள்

காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | சஹிப்ஸதா ஃபர்ஹான் மட்டும் அடித்தால் போதுமா?: கோட்டைவிட்ட பாகிஸ்தான்! | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

