லாரி - வேன் மோதி விபத்து: 4 குழந்தைகள் உள்பட 11 பேர் பலி
சத்தீஸ்கர் மாநிலத்தில் லாரியும் வேனும் மோதிய விபத்தில் 4 குழந்தைகள் உள்பட 11 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சத்தீஸ்கர் மாநிலத்தில் லாரியும் வேனும் மோதிய விபத்தில் 4 குழந்தைகள் உள்பட 11 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பலோட பஜார் மாவட்டம் ஹிலோரா கிராமத்தை சேர்ந்த 20 பேர் நேற்று இரவு வேன் மூலம் குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது கமாரியா கிராமம் அருகே வந்தபோது வேன் மீது அவ்வழியாக சென்ற லாரி மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 4 குழந்தைகள் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், காயமடைந்த 8-க்கும் மேற்பட்டவர்களை கிராம மக்கள் உதவியுடன் காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், மேல் சிகிச்சைக்காக சிலர் ராய்ப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...