இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

புதுச்சேரிக்கு குடியரசு துணைத் தலைவர் வருகை திடீர் ரத்து

புதுச்சேரிக்கு குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கரின் வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

News image
Updated On :26 பிப்ரவரி 2023, 11:57 am

DIN


புதுச்சேரி: புதுச்சேரிக்கு குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கரின் வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக, சென்னை மற்றும் புதுச்சேரிக்கு வரும் 28-ஆம் தேதி வரவுள்ளார். அவரது வருகையையொட்டி, மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து, தமிழ்நாடு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தலைமையில் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை(28) நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. இந்த விழாவில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. குடியரசு துணைத் தலைவராக பதவியேற்ற பின் முதன்முதலாக வருவதால் அவரது வருகைக்கான ஏற்பாடுகளை புதுச்சேரி அரசு தீவிரம் காட்டியது.

இது தொடர்பாக அதிகாரிகளும் ஆலோசனை நடத்தினர். காவல்துறை அதிகாரிகளும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தொடர்பாக ஆய்வு நடத்தினர்.

இந்நிலையில், குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரின் புதுச்சேரி வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. நிர்வாக பிரச்னைகள் காரணமாக அவர் வரவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இதற்கிடையே திட்டமிட்டபடி அதே நாளில் பட்டமளிப்பு விழாவினை நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.