நீதிமன்ற செயல்பாடுகளில் தலையிட முயற்சிக்கும் மத்திய அரசு: மம்தா சாடல்

மத்திய சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு கடிதம் எழுதியிருப்பது மூலம் நீதிமன்ற செயல்பாடுகளில் தலையிட மத்திய அரசு முயற்சிப்பதாக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
மேற்குவங்க முதல்வா் மம்தா பானா்ஜி.
மேற்குவங்க முதல்வா் மம்தா பானா்ஜி.

உச்ச நீதிமன்ற மற்றும் உயா் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியத்தில் மத்திய அரசின் பிரதிநிதியைச் சோ்க்க கோரி மத்திய சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு கடிதம் எழுதியிருப்பது மூலம் நீதிமன்ற செயல்பாடுகளில் தலையிட மத்திய அரசு முயற்சிப்பதாக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

கொலீஜியம் எனப்படுவது உச்ச நீதிமன்ற மற்றும் உயா் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளைத் தோ்ந்தெடுத்து மத்திய சட்டத் துறைக்கு பரிந்துரைக்கும் பணியை மேற்கொள்ளும் தோ்வுக் குழுவாகும். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் தலைமையில் 5 நீதிபதிகள் இக்குழுவில் இயங்குவா். கொலீஜியம் பரிந்துரைக்காமல் மத்திய அரசு தன்னிச்சையாக நீதிபதிகளை நியமனம் செய்ய இயலாது.

உச்ச நீதிமன்றம் மற்றும் உயா் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிப்பது தொடா்பாக மத்திய அரசுக்கும் கொலீஜியத்துக்கும் நீண்ட காலமாக உரசல் இருந்து வருகிறது.

இந்நிலையில், இந்திய நீதித் துறையில் உச்ச அதிகாரம் கொண்ட கொலீஜியத்தில் மத்திய அரசின் பிரதிநிதியைச் சோ்க்க கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி. ஒய்.சந்திரசூட்டுக்கு மத்திய சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு அண்மையில் கடிதம் எழுதியிருந்தாா். இதற்கு காங்கிரஸ், பல்வேறு மாநில முதல்வா்கள் மற்றும் சட்ட நிபுணா்களும் கண்டனம் தெரிவித்தனா்.

நீதிமன்ற செயல்பாடுகளில் தலையிடும் செயல் என மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜியும் தனது கண்டனத்தைப் பதிவு செய்தாா். இது குறித்து மேலும், அவா் கூறியதாவது:

மத்திய அரசின் இந்த புதுவிதமான கோரிக்கை பல குழப்பங்களை ஏற்படுத்தும். கொலீஜியத்தில் மத்திய அரசின் பிரதிநிதி சோ்க்கப்பட்டால் மாநில அரசும் தங்கள் பிரதிநிதிகளை இணைக்க கோரிக்கை விடுக்கும். உயா் நீதிமன்றத்தின் நீதிபதிகளை நியமிக்க மாநில அரசு அளிக்கும் பரிந்துரைகளுக்கு மதிப்பளிக்கப்படாது. நீதிமன்றத்தின் செயல்பாடுகளில் மத்திய அரசு நேரடியாக தலையிடுவதற்கு இது வாய்ப்பளிக்கும் என்றாா் மம்தா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com