மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராஜஸ்தான் சாலை விபத்தில் 5 பேர் பலி! கோயிலுக்குச் சென்று திரும்பும்போது விபரீதம்!

ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில், சுஜாங்கர் அருகே உள்ள சலாசர் கோயிலில் பிரார்த்தனை செய்துவிட்டுத் திரும்பும் போது, ஹரியாணாவைச் சேர்ந்த 5 பேர் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.

News image
கோப்புப் படம்
Updated On :23 ஜனவரி 2023, 1:23 pm

DIN


ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கோயிலில் பிரார்த்தனை செய்துவிட்டுத் திரும்பும் போது, ஹரியாணாவைச் சேர்ந்த 5 பேர் சாலை விபத்தில் உயிரிழந்ததாக காவல்துறையினர் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

ராஜஸ்தான் மாநிலம், மாநிலம் சிகார் மாவட்டத்தில், சுஜாங்கர் அருகே உள்ள சலாசர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் தரிசனம் செய்ய ஹரியாணாவைச் சேர்ந்த 5 பேர் காரில் சென்றுள்ளனர்.

இந்நிலையில், ஃபதேபூர்-சலாசர் நெடுஞ்சாலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு அவர்கள் வந்த கார் எதிரே வந்த லாரி மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்ததாக டிஎஸ்பி ராஜேஷ் வித்யார்த்தி தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த 5 பேரும், ஹரியாணாவின் ஃபதேஹாபாத் மாவட்டத்தை சேர்ந்த நண்பர்கள் என தெரியவந்துள்ளது. இவர்கள் ஹனுமானை பிரார்த்தனை செய்ய அங்கு சென்றுள்ளனர். 

இறந்தவர்கள் அஜய் குமார், அமித் சிங், சந்தீப் சிங், பிரதீப் சிங் மற்றும் மோகன் லால் என அடையாளம் காணப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.