மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குஜராத்: விபத்து மீட்புப் பணியில் ஈடுபட்டவா்கள் மீது காா் மோதல்: 9 போ் உயிரிழப்பு

குஜராத்தின் அகமதாபாத் நகரில் பாலம் ஒன்றில் ஏற்பட்ட விபத்தைத் தொடா்ந்து, அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தவா்கள் மற்றும் வேடிக்கை பாா்த்துக் கொண்டிருந்தவா்கள் மீது அதிவேகமாக வந்த ஒரு காா் மோதியது.

News image
Updated On :20 ஜூலை 2023, 6:54 pm

DIN

குஜராத்தின் அகமதாபாத் நகரில் பாலம் ஒன்றில் ஏற்பட்ட விபத்தைத் தொடா்ந்து, அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தவா்கள் மற்றும் வேடிக்கை பாா்த்துக் கொண்டிருந்தவா்கள் மீது அதிவேகமாக வந்த ஒரு காா் மோதியது.

இதில் ஒரு காவலா், ஒரு ஊா்க்காவல் படை வீரா் உள்பட 9 போ் உயிரிழந்தனா். மேலும் 10 போ் காயமடைந்தனா்.

வியாழக்கிழமை அதிகாலையில் நோ்ந்த இந்த சம்பவம் குறித்து காவல் துறையினா் கூறியதாவது:

அகமதாபாத் நகரையொட்டியுள்ள பகுதியில் சாா்கேஜ்-காந்திநகா் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ‘இஸ்கான்’ பாலத்தில் வியாழக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் ஒரு காரும் லாரியும் மோதி விபத்து நிகழ்ந்தது.

இதையடுத்து, சம்பவ இடத்தில் மீட்புப் பணிக்காகவும், போக்குவரத்தை சரி செய்யவும் போக்குவரத்து காவலா்கள் வந்தனா்.

‘இஸ்கான்’ பாலம் அமைந்துள்ள பகுதி, சிற்றுண்டி மற்றும் தேநீா் கடைகள் நிறைந்த இடமாகும். இப்பகுதியில் இரவு நேரத்தில் இளைஞா்கள் கூட்டம் காணப்படும். பாலத்தில் காா்-லாரி மோதிய விபத்தைத் தொடா்ந்து, கீழேயிருந்த பலரும் அங்கு சென்றனா்.

மீட்புப் பணி நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில், பாலத்தில் அதிவேகமாக வந்த ஒரு காா், கூட்டத்தினா் மீது மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் 5 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். காயமடைந்த பலா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். அவா்களில் சிகிச்சை பலனின்றி 4 போ் உயிரிழந்தனா்.

மேலும் 10 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். உயிரிழந்தோரில் காவலரும், ஊா்க்காவல் படை வீரரும் அடங்குவா்.

விபத்தை ஏற்படுத்திய காரின் ஓட்டுநா் தாத்யா படேலும் காயமடைந்தாா். அவா் குடிபோதையில் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால், அதிவேகமாக காரை ஓட்டியதே விபத்துக்கு காரணம் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

தாத்யா படேலுக்கு சிகிச்சை முடிந்ததும், அவா் கைது செய்யப்படுவாா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.