உடல் உறுப்புகள் ஒன்றோடு ஒன்று எப்படி பேசிக்கொள்ளும்? ஐஐடி-சென்னை சொல்கிறது

நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும், ஒன்றோடு ஒன்று பேசிக்கொள்ளும் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், எவ்வாறு பேசிக்கொள்ளும் என்பதுதான் அறியாதது.
உடல் உறுப்புகள் ஒன்றோடு ஒன்று எப்படி பேசிக்கொள்ளும்? ஐஐடி-சென்னை சொல்கிறது

சென்னை: நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும், ஒன்றோடு ஒன்று பேசிக்கொள்ளும் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், எவ்வாறு பேசிக்கொள்ளும் என்பதுதான் அறியாதது.

ஆனால், உடல் உறுப்புகள் ஒன்றோடு ஒன்று எப்படி பேசிக்கொள்ளும் என்பதை அறிய உதவும் தொழில்நுட்பத்தை ஐஐடி-சென்னை கண்டறிந்துள்ளது.

ஒரு மனிதனுக்குப் பசிக்கிறது என்றால், அது மூளைக்குத் தெரிவிக்கப்படுகிறது. வயிறு நிரம்ப சாப்பிட்டதும் அதையும் வயிறுக்குத் தெரிவித்து, சாப்பிடுவதை நிறுத்தச் செய்கிறது. இதையெல்லாம் எப்படி தெரிவிக்கிறது உடல் உறுப்புகள் என்பதே விடை தெரியாத கேள்வியாக இருந்தது.

'மல்டிசென்ஸ்' என்ற தொழில்நுட்பத்தின் மூலம், உடல் உறுப்புகளின் மொழியை அறியும் கணினிமயமாக்கப்பட்ட திட்டத்தை ஐஐடி-சென்னை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஒரு உடல் உறுப்பு, மற்றொரு உடலுறுப்புடன் கலந்துரையாடாமல், தகவலைகள் பரிமாறிக்கொள்ளாமல் இருந்தால், மனித உடல் இயங்குவதே இயலாத காரியமாகிவிடும்.

ஒவ்வொரு மனித உடலிலும் 20 மரபணுக்கள் இருக்கும். ஆனால், இவை அனைத்துமே ஒரே நேரத்தில் இயக்கத்தில் இருக்காது. தற்போது, ஒரு சில மரபணுக்களை இயக்க வைப்பதில் எந்த புரதங்கள் பயன்படுகின்றன என்பதை கண்டுபிடிப்பதன் மூலம் பல முக்கிய விஷயங்களை அறியலாம். இதுபோன்ற சில புரதங்கள்தான் ஒரு உடலுறுப்பிலிருந்து முக்கியத் தகவல்களை மற்றொரு உடலுறுப்புக்குக் கடத்துவதற்கு மூலக்காரணியாக உள்ளன என்கிறது ஐஐடி-சென்னையின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் பேராசிரியர் மணிகண்டன் நாராயணனின் ஆராய்ச்சிக் கட்டுரை. இது பிஎல்ஓஎஸ் கம்யூடேஷசனல் உயிரியல் என்ற இதழில் வெளியாகியிருக்கிறது.

உடலுறுப்புகள் இயங்க எந்த மரபணு தேவை, ஒரு உடலுறுப்புடன் மற்றொரு உடலுறுப்பு பேசுவதற்கு எந்த மரபணு பயன்படுகிறது, உடல் இயக்கம் முழுமைக்கும் தேவைப்படும் மரபணு எது என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கண்டறிந்திருப்பதாக நாராயணன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆராய்ச்சிக் கட்டுரையின் இணை-ஆசிரியராக, ஐஐடி-சென்னை ஆராய்ச்சியாளர் டாக்டர் தருண் குமார், டாக்டர் சங்க மித்ரா, பேராசிரியர் பலரமன் ரவீந்திரன் மற்றும் இன்டெல் கார்பரேஷன் ஆராய்ச்சியாளர் டாக்டர் ராமநாதன் சேதுராமன் இடம்பெற்றுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com