பிபர்ஜாய் புயல்: பாகிஸ்தானில் ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்!
பாகிஸ்தானில் பிபர்ஜாய் புயல் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கிழக்கு மத்திய அரபிக்கடலில் கடந்த 6-ஆம் தேதி உருவான இந்தப் புயல், குஜராத்தின் மாண்டவி நகருக்கும் பாகிஸ்தானின் கராச்சி நகருக்கும் இடைப்பட்ட பகுதியில் வரும் 15-ஆம் தேதி நண்பகலில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
புயல் கரையைக் கடக்கும்போது பாகிஸ்தானின் பல மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதோடு, காற்றின் வேகம் மணிக்கு 1405 முதல் 150 கி.மீ. வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக தட்டா, பாடின், சஜாவால், தர்பர்கர், கராச்சி, மிர்புர்காஸ், உமர்கோட், ஹைதராபாத், ஓர்மாரா, டான்டோ அல்லாஹியார் ஆகிய பகுதிகளில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புயல் கரையைக் கடக்கும் வரை மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தற்காலிக முகாம்கள் அமைத்து தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் உள்ளோருக்கு சுத்தமான குடிநீர் மற்றும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், ராணுவம், கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை அதிகாரிகளுடன் மாவட்ட நிர்வாகங்கள் தொடா்ந்து தொடா்பில் இருந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

