ஹிமாசலில் வெள்ளம்: 6 பேர் பலி; 10 பேர் காயம்

ஹிமாசலில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு 6 பேர் பலியாகியுள்ளனர்.
ஹிமாசலில் வெள்ளம்: 6 பேர் பலி; 10 பேர் காயம்

ஹிமாசலில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு 6 பேர் பலியாகியுள்ளனர்.

ஹிமாசலில் வழக்கமாக பருவமழை தொடங்குவதைக் காட்டிலும் சற்று முன்னதாகவே பருவழை தொடங்கி மாநிலத்தில் கனமழை பெய்ததுள்ளது.

சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. திடீரென்று பெய்த கனமழையில் சிக்கி 6 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 10 பேர் காயமடைந்துள்ளனர்.

ஹிமாசல பிரதேசத்தின் பேரிடர் மேலாண்மை முதன்மைச் செயலாளர் ஒன்கர் சந்த் ஷர்மா கூறுகையில், "இதுவரை வெள்ளத்தில் சிக்கி 6 பேர் பலியாகியுள்ளனர். 10 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், 303க்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்துள்ளன.

இந்த கனமழையால் அரசுக்கு ரூ.3 கோடி இழப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை, 2 தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட 124 சாலைகள் சேதமடைந்துள்ளது.

மேலும், மண்டி - பண்டோ பகுதியில் ஏராளமான வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளது. எனவே வாகனங்களை மாற்றுப்பாதையில் இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மண்டி-பராஷர் பகுதியில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். ஹிமாசல் மாநிலத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்கு விடுக்கப்பட்ட மழை எச்சரிக்கை தொடரும்" என்று ஒன்கர் சந்த் ஷர்மா தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com