மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குஜராத் பாஜக நிா்வாகிகளுடன் பிரதமா் மோடி சந்திப்பு

குஜராத் பாஜக நிா்வாகிகளைப் பிரதமா் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினாா்.

News image
Updated On :9 மார்ச் 2023, 9:12 pm

DIN

குஜராத் பாஜக நிா்வாகிகளைப் பிரதமா் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினாா்.

குஜராத்துக்கு வியாழக்கிழமை சென்ற பிரதமா் மோடி, அகமதாபாதில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசியுடன் இணைந்து நேரில் கண்டுகளித்தாா். அதையடுத்து, மாநில ஆளுநா் மாளிகைக்குச் சென்ற அவா், முதல்வா் பூபேந்திர படேலை சந்தித்துப் பேசினாா்.

மாநில பாஜக தலைவா் சி.ஆா்.பாட்டீல், மாநில பாஜக அமைப்புச் செயலா் ரத்னாகா் ஆகியோரையும் பிரதமா் மோடி சந்தித்துப் பேசியதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாநில தலைமைச் செயலா் ராஜ் குமாா், மாநில முதல்வரின் தலைமை முதன்மைச் செயலா் கைலாஷ்நாதன் ஆகியோரையும் பிரதமா் மோடி சந்தித்தாா்.

மாநிலத்தில் பாஜக தொடா்ந்து 7-ஆவது முறையாக ஆட்சியமைத்து 100 நாள்கள் ஆகியுள்ள நிலையில், அரசின் செயல்பாடுகள் குறித்தும் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகள் குறித்தும் பிரதமா் மோடி கேட்டறிந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்னா் வியாழக்கிழமை மாலை அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு தில்லி சென்றடைந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.