/

ம.பி. காங்கிரஸ் அலுவலகத்தை சூறையாடிய பஜ்ரங்தளம்

மத்தியப் பிரதேசத்தில் பேரணி மேற்கொண்ட பஜரங்தள அமைப்பைச் சேர்ந்தவர்கள், காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் கதவுகளை உடைத்து சூறையாடினர். 

News image
Updated On :4 மே 2023, 10:26 am

DIN

மத்தியப் பிரதேசத்தில் பேரணி மேற்கொண்ட பஜரங்தள அமைப்பைச் சேர்ந்தவர்கள், காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் கதவுகளை உடைத்து சூறையாடினர். 

அலுவலகத்தின் மேற்கூரைகளை பிரித்து எரிந்தும், உள்ளே இருந்த பொருள்கள் மற்றும் உடமைகளை சேதப்படுத்தினர்.

கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி காங்கிரஸ் வெளியிட்ட தோ்தல் அறிக்கையில் மத, ஜாதி உணா்வுகளைத் தூண்டி, மக்களிடையே பகைமையை உருவாக்கும் தனிநபா்கள் அல்லது பஜ்ரங்தளம், பாப்புலா் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா போன்ற அமைப்புகளைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஜ்ரங்தளம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடகத்திலுள்ள பஜ்ரங்தள அமைப்பினர், அனைத்து அனுமன் கோயில்களிலும் இன்று பாராயணம் பாடப்படும் என அறிவித்துள்ளது. இதற்கு விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், மத்தியப் பிரதேசத்திலுள்ள பஜ்ரங்தள அமைப்பினர் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணியில் ஈடுபட்டனர். மேலும், ஜபால்பூரிலுள்ள காங்கிரஸ் அலுவலகத்தின் கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்தனர். 

அலுவலகத்தின் மேற்கூரை மற்றும் கட்டுமான பொருள்களை வீணாக்கி, பொருள்கள், உடமைகளை சேதப்படுத்தினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.