மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மணிப்பூர் வன்முறை: மத்திய அரசைக் கடுமையாகச் சாடிய காங்கிரஸ்!

மணிப்பூரில் நடந்த வன்முறை தொடர்பான பொறுப்பிலிருந்து மத்திய அரசு தப்ப முடியாது என்று காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. 

News image
Updated On :9 மே 2023, 6:30 am

DIN

புது தில்லி: மணிப்பூரில் நடந்த வன்முறை தொடர்பான பொறுப்பிலிருந்து மத்திய அரசு தப்ப முடியாது என்று காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், 

மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் நீதிபதி இவ்வளவு மனித அவலத்தைத் தூண்டியது ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் மத்திய அரசு அதன் பொறுப்பிலிருந்து தப்ப முடியாது என்று ட்விட்டர் மூலம் பதிவிட்டுள்ளார். 

பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் பட்டியலில் மாற்றங்களைச் செய்ய உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று தலைமை நீதிபதியைச் சுட்டிக்காட்டியுள்ளது. 

பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில், 53 சதவீதம் உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஹிந்துக்களாவா்.

அதேநேரம், மாநில மக்கள்தொகையில் 40 சதவீதம் உள்ள நாகா, குகி உள்ளிட்ட பழங்குடியினர், மைதேயி சமூகத்தினரின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பழங்குடியினர்களில் பெரும்பாலானோர் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுகின்றனர்.

இந்தச் சூழலில், இரு சமூகங்களுக்கும் இடையே கடந்த புதன்கிழமை பெரும் கலவரம் மூண்டது. வீடுகள், கடைகள், வழிபாட்டுத் தலங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. வன்முறையை ஒடுக்க ராணுவத்தினா், அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினர், துணை ராணுவத்தினர் என சுமாா் 10,000 போ் குவிக்கப்பட்டனர். மாநிலம் முழுவதும் கைப்பேசி இணையச் சேவை முடக்கப்பட்டது.

பலத்த பாதுகாப்புக்கு இடையே மாநிலத்தில் தற்போது இயல்புநிலை திரும்பி வருகிறது. கலவரத்தில் 54 போ் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தக் கலவரம் தொடா்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை கோரி, ‘மணிப்பூா் பழங்குடியினா் மன்றம்’ என்ற தன்னார்வ அமைப்பு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் பொது நல மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.