பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

கேரளம்: சட்டைப் பையில் பற்றி எரிந்த கைப்பேசி!

கேரளத்தின் திரிச்சூர் மாவட்டத்தில் வயதான ஒருவரின் சட்டைப் பையில் வைத்திருந்த கைப்பேசி வெடித்து தீப்பிடித்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :6 பிப்ரவரி 2024, 6:28 pm IST

கேரளத்தின் திரிச்சூர் மாவட்டத்தில் வயதான ஒருவரின் சட்டைப் பையில் வைத்திருந்த கைப்பேசி வெடித்து தீப்பிடித்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் துரிதமாக செயல்பட்டதால் அந்த நபர் நல்வாய்ப்பாக தீக்காயங்கள் ஏதுமின்றி தப்பினார்.

கேரளத்தில் இதுபோன்று கைப்பேசி வெடித்து விபத்து ஏற்படுவது இந்த மாதத்தில் இது மூன்றாவது முறையாகும். இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அந்த வயதான நபர் டீக்கடையில் நின்று டீ குடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரது சட்டைப் பையில் இருந்த கைப்பேசி திடீரென வெடித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி விடியோ தற்போது இணையத்தில் வைரலாகி  வருகிறது. 

இணையத்தில் வைரலாகி வரும் அந்த விடியோவில் பதிவாகியிருப்பதாவது: ஒரு வயதான முதியவர் டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருக்கிறார். திடீரென அவரது சட்டைப் பையில் வைத்திருந்த கைப்பேசி வெடித்து பற்றி எரிகிறது. துரிதமாக செயல்பட்ட அந்த முதியவர் சட்டைப் பையில் இருந்து கைப்பேசியை எடுத்துக் கீழே போடுகிறார். அந்தக் கடையில் உள்ள மற்றொரு நபர் அந்த கைப்பேசியின் மீது தண்ணீரை ஊற்றி அணைப்பதாக பதிவாகியுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்த காவல் துறை தரப்பில் கூறியதாவது: அந்த முதியவர் தீப்பற்றி எரிந்த அந்த கைப்பேசியை ஓராண்டுக்கு முன்பாக 1000 ரூபாய்க்கு வாங்கியுள்ளார். அவரது கைப்பேசி தீப்பற்றி எரிவதற்கு முன்பு வரை எந்தவித பிரச்னையுமின்றி நன்றாக வேலை செய்துள்ளது. இருப்பினும், திடீரென தீப்பற்றியதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை என்றனர்.

இதேபோல கடந்த வாரத்தில், கேரளத்தில் கால்சட்டை பையில் வைத்திருந்த கைப்பேசி வெடித்து ஒருவருக்கு தீக்காயம் ஏற்பட்டது. கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி 8 வயது சிறுமி கைப்பேசி வெடித்து கேரளத்தில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.