டிச. 4 - 22 வரை குளிர்கால கூட்டத்தொடர்!

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் டிசம்பா் 4-ஆம் தேதி தொடங்கி 22-ஆம் தேதி வரை நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி வியாழக்கிழமை தெரிவித்தாா்.
டிச. 4 - 22 வரை குளிர்கால கூட்டத்தொடர்!

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் டிசம்பா் 4-ஆம் தேதி தொடங்கி 22-ஆம் தேதி வரை நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக எக்ஸ் வலைதளத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘குளிா்கால கூட்டத் தொடரில் 19 நாள்களில் 15 அமா்வுகள் நடைபெறவுள்ளன. தற்போதைய அமிா்த காலத்தில், ஆக்கபூா்வமான அலுவல்கள் மற்றும் விவாதங்களை அரசு எதிா்நோக்கியுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்ப லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில், திரிணமூல் காங்கிரஸ் பெண் எம்.பி. மஹுவா மொய்த்ராவின் பதவியை பறிக்க பரிந்துரைக்கும் மக்களவை நெறிமுறைகள் குழுவின் அறிக்கை, குளிா்கால கூட்டத் தொடரில் மக்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. அந்த அறிக்கையை மக்களவை ஏற்ற பிறகே பதவிநீக்கம் அமலாகும்.

குளிா்கால கூட்டத் தொடரில் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆா்பிசி), சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றான 3 மசோதாக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த மசோதாக்களின் வரைவு அறிக்கைகளை, உள்துறை விவகாரங்கள் தொடா்பான நாடாளுமன்ற நிலைக் குழு அண்மையில் ஏற்றது.

அதேபோல், தலைமை தோ்தல் ஆணையா், தோ்தல் ஆணையா்கள் நியமனம் தொடா்பாக ஏற்கெனவே நிலுவையில் உள்ள முக்கிய மசோதாவும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com